சிவகங்கை நகராட்சி
நிருவாகத்தின் கவனத்திற்கு…
சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இராமச்சந்திரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அறிஞர் அண்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இராமச்சந்திரனார் நினைவுப் பூங்காவும், சிலையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கை நகரின் நீதிமன்ற வாசல் அருகில் அமைந்துள்ளன. சிவகங்கை வரலாற்று நினைவுகளில் இப் பூங்காவும் முக்கியமான ஒன்றாகும். தென் மாவட்டங்களின் சுயமரியாதை இயக்கத்தின் வேர் படர்ந்த வரலாற்றுடன் இணைந்த முக்கிய சின்னமாகும். பூங்காவைச் சுற்றி விளம்பரப் பதாகைகள் வைத்து பூங்காவை மறைத்து விட்டார்கள். இதைக் கண்டித்து நான் ஏற்ெகனவே முகநூல், கட்செவி ஆகியவற்றின் மூலமாகவும், பதாகை வைத்தவர்களிடம் நேரடியாகவும் தொடர்பு கொண்டும் இராமச்சந்திரனாரின் சிறப்புகளைச் சொல்லி, அத்தகைய மாமனிதரின் சிலையை மறைக்கலாமா என்று கேட்டு பதாகைகளை அகற்றுமாறும் கேட்டுக் கொண்டும்கூட தற்பொழுது பூங்காவையும் சிலையையும் மறைத்து கடை வைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
எனவே இவ் விடயத்தில் சிவகங்கை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடை, மற்றும் விளம்பரப் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– இரா.புகழேந்தி எம்.ஏ.,
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், சிவகங்கை.
