மும்பை, ஜூலை 4 மகா ராட்டிராவில் அரசியல் கட்சி களை உடைப்பதற்காக, ராமன் கோயில் நிதியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு பயன்படுத் தப்படுவதாக சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கடுமை யான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:
அரசியல் குதிரை பேரம்
மாற்றுக்கட்சி நாடாளுமன்ற மற்றம் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கி, கட்சிகளை உடைக்கும் செயலை ‘ஆபரேஷன்’ என்று அழைக்கிறார்கள். அப்படி யென்றால், பாஜக தற்போது நடத் துவது ‘ஆபரேஷன் ராம் மந்திர்’ தானா? அயோத்தி ராமன் கோயிலுக்காகத் திரட்டப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகளும், திருட்டும் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ராமன் கோயிலில் இருந்து திருடப்பட்ட அந்தப் பணத்தை வைத்துதான், தற்போதைய அரசியல் கட்சிகள் உடைக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
“கோயில்களில் கொள்ளையடிப்ப வர்களை இந்துக்கள் இனி ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் இ வ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்
பாஜகவின் அரசியல் நகர்வுகளை ராமன் கோயில் நிதியோடு ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே பேசியுள்ள இந்த விமர்சனம், தற்போது மகாராட்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
