பார்ப்பனர்களின் ஸநாதன பழக்கமான “சதி” என்ற அந்த கொடிய செயலை தடுத்து நிறுத்த சட்டமியற்றிய செயல், அவர்களின் ஸநாதனக் கோட்பாட்டின் மீது விழுந்த “முதல் அடி” என்று கூட சொல்லலாம். “சதி” என்ற கொலை பாதகச் செயலைத் தடுத்தது மட்டுமல்லாமல், “மனுதர்மத்தை”க் காட்டி மரண தண்டனையிலிருந்து (“பிராமணனுக்குத் தலையை “முண்டிதம்”! செய்வதே (மொட்டை யடித்தலே) மரண தண்டனையாகும், மற்ற வருணத்தார்க்கு (சூத்திரனுக்கு) மரண தண்டனை உண்டு”. (அசல் மனுதர்ம சாஸ்திரம்” 1919. அத்தியாயம் 8, ஸ்லோகம் 379.) தப்பி வந்த பார்ப்பனக் கூட்டத்திற்கு அது முதல் பேரிடியாக அமைந்துவிட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் 1817ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டமும் (பார்ப்பனர்க்கு மரண தண்டனை விலக்குச் சட்டம்), 1829இல் கொண்டு வரப்பட்ட “வங்க ஒழுங்கு முறை சட்டம் XVII” (“சதி” ஒழிப்புச் சட்டம்) இரண்டும் அவர்களின் ஸநாதனக் கொள்கைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களாகவே அவர்கள் நினைத்தனர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிவுடன் போராட முடியாததால் ஆரம்பத்தில் மேற்கண்ட சட்டங்களை எதிர்த்து அவர்களால் முணுமுணுக்கவே முடிந்தது. எதிர்த்துக் குரல் எழுப்ப முடியவில்லை. ஸநாதனத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசாங்கம் கொண்டு வந்த ஸநாதனத்திற்கு எதிரான பல சீர்திருத்தங்களில் “சதி” ஒழிப்பு முதலும், முக்கியத்துவம் வாய்ந்தது.
சமரசமின்றி போராட்ட உணர்வுடன் எழுதப்பட்ட “சதி”யை ஒழிக்கக் கொண்டு வரப்பட்ட 1829ஆம் ஆண்டு சட்டம், காலனிய ஆட்சியில் 190 ஆண்டுகள் வரலாற்றில் பழமைவாத உணர்வுகளுக்கு எவ்வித சலுகையும் அளிக்காமல், பெண்களைப் பாதுகாத்த, மிகப் புரட்சியான ஒரே சமூக சீர்திருத்த சட்டமாக இருந்தது. பொதுவாக பார்ப்பனர்களால் செரிக்க முடியாத சட்டமாக அது இருந்தாலும், சில முற்போக்கு(?)ப் பார்ப்பனர்கள் அதை ஆதரித்தனர்.
அவர்களில் முக்கியமானவர், “சதி”யை ஒழிக்க உண்மையான உணர்வுடன் போராடியவர் ராஜாராம் மோகன் ராய். “சதி”யை ஒழிக்க போராடிய அவர் அரசாங்கம் மிதமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் வில்லியம் பெண்டிங் பிரபுவின் சட்டம் “சதி”யை முற்றாக ஒழிப்பதில் தீவிரமாக இருந்தது. அதைப் பற்றி ராஜாராம் மோகன்ராய் குறிப்பிடும்போது, “பெண்களைக் கொலை செய்பவர்கள் என்று எங்கள் நடத்தையின் மீது சுமத்தப்பட்டிருந்த மோசமான களங்கத்திலிருந்து எங்களைக் காலா காலத்திற்கும் காப்பாற்றியதற்கு நன்றி” என்று அவரும், 300 பார்ப்பனர்களும் கையெழுத்திட்டு ஒரு வாழ்த்துக் கடிதத்தை கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் அளித்தனர்.
“சதி” வழக்கத்தால் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணை (“சதி” மாதாவை) சுடலையிலிருந்து கடவுள் சிவன் தூக்கிக் கொண்டு”சொர்க்கத்திற்கு கொண்டு போகிறார்!”) 1830இல் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டத்தின் மூலம் “சதி”க்கு வங்கத்தில் விதிக்கப் பட்டத் தடை பிரிட்டிஷ் இந்தியா முழு மைக்கும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டிஷாரின் மேலாதிக்கத்தின் கீழ் அவர்களுக்குக் கப்பம் கட்டும் சமஸ்தானங்களிலும் “சதி” ஒழிப்புச் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. அதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட சமஸ்தானத்து மன்னர்கள், நிர்வாகத்தில் பெரும் பங்கு வகித்த பார்ப்பனர்கள் எதிர்ப்பால் “சதி” ஒழிப்புச் சட்டத்தை அமலாக்குவதற்குத் தயங்கினர். ஆனால் ஆங்கிலேய அரசின் அழுத்தத்தால் கடைசியில் அந்த சட்டத்தை நிறைவேற்றினர்.
இந்த “இடுபரி” முடிந்து சமஸ்தானங்களில் அந்த சட்டம் நிறைவேற மேலும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. வில்லியம் பென்டிங் பிரபு “சதி”யில் மறைந்திருக்கும் ஜாதிய,பாலின கொடுமைக்கு எதிராகத் தொடுத்த சட்ட பூர்வமான போர், உள்நாட்டு மக்களின் நீண்ட கால வழக்கத்தை “குற்றம்”என்று மாற்றி, பழமைவாதிகளை வெற்றி கொண்டு வரலாறு படைத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (Ref: “சாதிப் பெருமை”by மனோஜ் மிட்டா.)
வில்லியம் பென்டிங் பிரபு கொண்டு வந்த “சதி” ஒழிப்புச் சட்டம்”நியாயசமத் அட்வலாத்” என்கிற உச்ச குற்றவியல் நீதி மன்றத்திற்கு”சதி” குற்றத்திற்கு காரணமானவர்களுக்கு”மரண தண்டனை”வழங்கும் அனுமதியைக் கொடுத்தது.
பார்ப்பனர்களை நடுங்க வைத்தது இந்த காரணம்தான். “ஒரு விதவைக்கு போதையூட்டி, அல்லது அவரை மயக்கமடையச் செய்து, அல்லது அவர் சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுப்பதைத் தடுக்கும் வேறு வழிகளைக் கையாண்டு அவரை கணவனின் உடலை எரிக்கும் நெருப்பிலே தள்ளிக் கொல்பவர்களுக்கு அல்லது “வன்முறையாகவும், கட்டாயப்படுத்தியும் “அவரை எரித்துக் கொல்லும் குற்றம் செய்பவர்களுக்கு “அதிகபட்ச தண்டனையான “மரண தண்டனை” பரிந்துரைக்கப்பட்டது” என்று அந்த சட்டம் அனுமதியளித்தது.
மரண தண்ட னைக்கு பார்ப்பனர் பயந்தாலும், தங்களின் “விஷக் கொடுக்கை” நீட்டிக் கொட்டாமல் விடுவார்களா? அவர்கள் சட்டத்தை எதிர்த்து என்ன “விஷமம்” செய்தார்கள்? என்பது உங்களுக்குத் தெரியுமா? (Ref: “சாதிப் பெருமை” by மனோஜ் மிட்டா.)
சிதையிலிருந்து நெருப்பின் சூடு தாங்காமல் எழுந்து ஓடியப் பெண்ணை தடி கொண்டு அடித்து மீண்டும் வலுக்கட்டாயமாக சிதையில் தள்ளி எரிக்கும் காட்சி!) “சதி”யை எதிர்த்து வில்லியம் பென்டிக் கொண்டு வந்த சட்டம், ஏற்கெனவே இருந்த பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த மரண தண்டனை விலக்கை ஒழிக்கும் சட்டம் ஆகியவை பார்ப்பனர்களை அதிகம் எரிச்சல் படுத்தியது. பென்டிங் சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் லண்டனிலிருக்கும் “பிரிவியூ கவுன்சிலில்” ஒரு சீராய்வு மனுவை அளித்தனர்.
“ராதாகாந்த தேப்” என்ற பார்ப்பனர் பெயரில் இந்த மனு அளிக்கப்பட்டது. பல பார்ப்பனப் பண்டிதர்களின் கருத்துகளையும், “சதி”யை இந்துக்களின் ‘புனித’க் கடமை என்று இந்து சாஸ்திரங்களை மேற்கோள் காட்டியும் “சதி” மேலிருந்த தடையை நீக்கக் கோரி பார்ப்பனர்களின் வழக்குரைஞர்கள் வாதம் புரிந்தனர்.
இது இங்கிலாந்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. ‘தி கார்டியன்’, ‘தி அப்சர்வர்’ பத்திரிகைகளில் இது தலைப்புச் செய்தியாகவே வெளியிடப்பட்டது. “சதி”எனும் பெண்களை கொல்லும் கொடிய வழக்கத் திற்கு வில்லியம் பென்டிங் பிரபு விதித்தத் தடையை எதிர்த்து வங்காளத்தைச் சேர்ந்த சில பார்ப்பனர்கள் பிரிவியூ கவுன்சிலில் செய்திருக்கும் மேல் முறையீட்டு மனுவை ஒரு ஆங்கிலேய வழக்குரைஞர் வாதம் செய்வது பிரிட்டிஷ் மக்களுக்கு ஆச்சரியமளிக்கும் ஒரு செயல்” என்று அந்தப் பத்திரிகைகள் எழுதின என்பதும்,பிரிவியூ கவுன்சில் இந்த வழக்கில் என்ன முடிவு எடுத்தது. (Ref: “சாதிப் பெருமை” by மனோஜ் மிட்டா.)
“சதி”க்கு ஆதரவாக பல வங்காளப் பார்ப்பனர்கள், பிரிவியூ கவுன்சிலில் தொடர்ந்த வழக்கு லண்டனில் நடந்து கொண்டிருந்தது. “சதி”க்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த பார்ப்பனர்கள் சார்பாக பிரிவியூ கவுன்சிலில் வாதாடிய ஆங்கிலேய வழக்குரைஞர் ஜான் எலியட் டிரிங் வாட்டர் பெத்யூன் என்ற இளைஞர் வழக்கில் “சதி”யை எதிர்க்க, எதிர் மனுதாரராக ராஜாராம் மோகன்ராய் தன்னை இணைத்துக் கொண்டார்.அவருடைய வாதம் பிரிவியூ கவுன்சிலில் முடிவெடுக்க பெரிதும் உதவியது.”சதி”யைப் பற்றி அனைத்து நிலைகளையும் ஆராய்ந்த பிரி வியூ கவுன்சில் இறுதியாக 1832இல் “சதி”யை ஒழிக்க வில்லியம் பென்டிங் பிரபு இயற்றிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது அந்தத் தீர்ப்புக்கு அது குறிப்பிட்ட விளக்கங்கள் என்ன? (Ref: “சாதிப் பெருமை” by மனோஜ் மிட்டா.)
