ஸ்ருதி – நிச்சிரன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்கள் இருவரும் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இவர்களுடைய பார்ப்பன நண்பர்கள் நம் திருமண நிலையத்தில் பெற்றோர் முன்னிலையில் இணையேற்பு நடத்திக் கொண்டவர்கள்.
முதலில் தங்கைக்குத் திருமணம் நடைபெற்றது. சிறிது நாள்கள் கழித்து அவர்கள் அண்ணனுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அதுமட்டுமல்ல ‘விடுதலை’ நாளிதழும் இவர்கள் இல்லத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒருவாரம் ‘விடுதலை’ நாளிதழ் அவர்கள் வீட்டிற்குப் போகாத காலத்தில் கைப்பேசியில் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரியை தொடர்பு கொண்டு “ஏன் விடுதலை எங்களுக்கு வரவில்லை” என்று கேட்டவர்கள். அவர்கள் வாயிலாக இது மூன்றாவது பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வாகும். (சென்னை, 1.7.2026)
