பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணவிகளின் சாதனைகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஜூலை 3- 8ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற 9ஆவது சதுரங்கப்போட்டியில், 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 5ஆம் இடமும், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு 2ஆம் இடமும் பெற்று பள்ளிக்குப்பெருமை சேர்த்தார்.

9ஆம் வகுப்பு மாணவி வி.சஹானா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற 9ஆவது சதுரங்கப் போட்டியில் 15 வயதிற்குட் பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 8ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார்.

10ஆம் வகுப்பு டி.விசாந்தினி மற்றும் 12ஆம் வகுப்பு டி.கீர்த்திகாசிறீ Talent Fest Trichyயில் நடைபெற்ற டேக்வோண்டோ போட்டியில் கலந்து கொண்டு கோப்பையையும், சான்றி தழையும் வென்றனர்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *