வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே தேர்வுக்கு இலவசப் பயிற்சி

1 Min Read

சென்னை, ஜூன் 14- வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பி எஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகளுக்கு சென்னையில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் சி.பழனி 12.6.2026 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:

வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழி காட்டும் மய்யத்தில் உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் வழிகாட்டுதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட் டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தல் என பல் வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

தற்போது டிஎன்பி எஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு மற்றும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள், ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு மற்றும் குரூப்-டி தேர்வு, எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு ஆகியவற்றுக்கு ஜூன் 1 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி தேர்வு களுக்கான வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், ரயில்வே, எஸ்எஸ்சி தேர்வு களுக்கான வகுப்புகள் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களிலும் காலை 10 முதல் மதியம் 1 மணிவரை நேரடியாகவும், அதே நாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை இணைய வழி வழியாகவும் நடைபெறுகின்றன.

போட்டித் தேர்வு களுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இதில் சேர விரும்பு வோர் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் கிண்டி திருவிக தொழிற்பேட்டை பேருந்து நிலையம் (ரயில் நிலையம் எதிரில்) அருகே உள்ள டான்சி கட்டடத்தின் முதல் தளத்தில் (ஏ-28) இயங்கும் மாநில தொழில்நெறி வழிகாட்டு மய்யத்தை (தொடர்பு எண்: 9361566648) நேரில் அணுகலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *