சென்னை, ஜூலை 2 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத பிரம்மோத்சவ விழா தேரில் இருந்த கலசமும், குடையும் சரிந்ததால், பக்தர்கள் பதற்றம் அடைந்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத பிரம்மோத்சவ விழா, ஜூன் 25 இல் தொடங்கியது.
விழாவின் ஏழாம் நாளான நேற்று (1.7.2026), தேரோட்டம் நடந்தது. 7 மணிக்கு, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் வடம் பிடித்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
குடையும், கலசமும் சரிந்தன!
மாட வீதியில் வலம் வந்த போது, தேரின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த குடையும், கலசமும் திடீரென சரிந்தன. இதை பார்த்து, பக்தர்கள் பதற்றம் அடைந்தனர். இதனால், தேரோட்டமும் நிறுத்தப்பட்டது.
மாட வீதிகளில் சேவை துறை நிறுவனங்கள், கம்பங்களுக்கு இடையே அமைத்திருந்த கேபிள்களால், குடையும், கலசமும் சரிந்தன. கோவில் ஊழியர்கள், சரிந்த குடையையும், கலசத்தையும் சரிசெய்த பின், தேரோட்டம் மீண்டும் நடந்தது.
மின் கம்பியில்
உரசி…
உரசி…
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேர் திருவிழா, நேற்று (1.7.2026) காலை 6.30 மணிக்குத் தொடங்கியது. தெற்கு மாடவீதியில், கோவிலின் சுற்றுச்சுவர் பகுதிக்கு வந்தபோது, தேரின் இடதுபுற சக்கரத்தின் அச்சு சேதமடைந்தது. மேலும், வலதுபுறம் இருந்த மின் கம்பத்தில் உரசியபடி தேர் நின்றது.பின், அச்சு சீரமைக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள், கம்பத்திலிருந்து கம்பிகளை அகற்றினர். இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக தேர் புறப்பட்டது. மேலும், மேற்கு மாட வீதி சந்திப்பு பகுதியில், மிளகு விநாயகர் கோவில் சாலை திருப்பத்தில் நகராமல், தேர் மீண்டும் நின்றது. தொடர்ந்து, இரண்டு மணி நேரம் போராடி, பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். பின், மதியம் 2:30 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது.
சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்த…
இப்படி நடந்தாலும் சாமிக்குச் சக்தியில்லை என்று நினைக்காமல் ஏதோ கெட்ட அறிகுறி என்று கூறி, அதற்குத் தோஷம் கழிக்கவேண்டும் என்று பரிகாரப் பூஜை, யாகம் என்று சொல்லி, அதிலும் தங்கள் சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள் பார்ப்பனர்கள்!
