சென்னை, ஜூலை 2- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மய்யம் திட்டமிட்டுள்ளது. திறமைமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்தரையாடல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இலவசமாக வழங்க உள்ளன. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர்.
இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம். எண். 6/9, அக்ரஹாரம் சந்து, அரண்மனைக்காரன் தெரு என்ற முகவரியில் அமைந்துள்ள கல்வி மய்யத்தில் ஜூலை 4 முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்புகள் நடைபெறும். தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான ஒளிப்படம் மற்றும் முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 97912 85693, 73387 03324, 73581 44387, 90426 92613, 63698 74318, 94446 41712 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
