அறிவியல் துணுக்குகள்!

காபி போட்டதும் மீதமாகும் ஈரத் தூளை உலர்த்தாமல், வெறும் 90 நொடிகளில் உயர்தர ‘உயிரிக் கரி’யாக மாற்றும் புதிய பிளாஸ்மா தொழில் நுட்பத்தை கொரியாவின் புவி அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகக் குறைவாகவே மாசுக்களை உமிழ்கிறது. இதன் வாயிலாக, உணவுக்கழிவுகள் மதிப்புமிக்க திட எரிபொருளாக மாறுகின்றன.

‘ஏரோனாக்ஸ் கோ’வின் ஆய்வாளர்கள், சுற்றுலா செல்வோருக்கான சிறியதான, துணி தேய்ப்புக் (இஸ்திரி) கருவியை உருவாக்கியுள்ளனர். இது, உலர்ந்த ஆடைக்குள் சூடான காற்றைச் செலுத்தி, 8 முதல் 12 நிமிடங்களில் சுருக்கங்களை நீக்கிவிடுகிறது. ஈரத் துணிகளை உலர்த்தவும், அவற்றின் மீது வாசனைத் திரவியத்தை பீய்ச்சி நறுமணமாக்கவும் உதவுகிறது இந்த கருவி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *