கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.7.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எஸ்அய்ஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து

* நீட் தேர்வில் முறைகேடுகள் நடவாமல் இருக்க உரிய மாற்றங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அயோத்தி ராமன் கோவில் திருட்டு குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மத்தியப் பிரதேசத்தில் கும்பல் தாக்குதல் வழக்கில் 7 பேருக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மிரட்டல். 2022இல் லாரி ஓட்டுநர் ஷேக் லாலா நசீர் அகமது கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட வழக்கில், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி தபஸ்ஸம் கான் ஜூன் 12 அன்று தீர்ப்பளித்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வாக்காளர் சிறப்பு திருத்தம் – எஸ்அய்ஆரை (SIR) எதிர்த்துச் செயல்பட அனைத்து சட்ட வழிகளையும் மாநில அரசு பரிசீலிக்கும்: கருநாடகா உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே. தாங்கள் எஸ்அய்ஆர் முறைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இதில் சில தவறுகள் இருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

தி இந்து:

* ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் எந்த இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கூற்று, பின்னர் அரசு வெளியிட்ட தகவலால் முரண்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த நடவடிக்கையில் 6 வீரர்கள் வீரமரணம் அடைந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவையை தவறாக வழி நடத்தியதாகக் கூறி ராஜ்நாத் சிங் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு மக்களவைத் தலைவரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தி டெலிகிராப்:

* அயோத்தி ராமன் கோவில் நன்கொடை முறைகேடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாதாட வழக்குரைஞர்கள் சங்கம் மறுப்பு – சட்டச் சிக்கலை எதிர்கொள்கின்றனர். முறைகேடு விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஅய் (CBI) விசாரணை கோரவும் வழக்குரைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கும் தொடர்பில்லாத இருவர்’: முதலமைச்சர் விஜய்யின் ‘நெருங்கிய கூட்டாளிகள்’ மீது எப்.அய்.ஆர் (FIR) பதிவு செய்ய திமுக கோரிக்கை. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த புகாரில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய கூட்டாளிகள் எனக் கூறப்படும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *