வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்கள் தமது 96-ஆம் வயதில் நேற்று (30.6.2026) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். இருமுறை ‘சாகித்திய அகாடமி’ விருது வென்றவர் என்ற சிறப்புக்குரியவர் கவிஞர் புவியரசு அவர்கள். கவிதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், திரைப்பட உரையாடல் என பல வகைகளில் தன் எழுத்தாற்றலில் சிறந்து விளங்கியவர்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
1.7.2026
சென்னை
