திருவனந்தபுரம், ஜூலை 1 சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறைத் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகளைத் திருடி, அதற்குப் பதிலாக போலி தங்கம் சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப ்பட்டி ருப்பது சிறப்பு புலனாய்வுக் குழு வின் விசாரணையில் அம்பலமாகி யுள்ளது. இந்தச் சதித்திட்டத்தில் சபரிமலை மூத்த தந்திரி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள் உட்பட 13 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி என்ன?
சபரிமலை கோயிலில் எந்தப் பணிகள் மேற் கொள்வதாக இருந்தாலும் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், கடந்த ஆண்டு துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகள், தங்க முலாம் பூசுவ தற்காக நீதிமன்ற அனுமதியின்றி சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெய கிருஷ்ணன் கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில், நேற்றுமுன்தினம் (29.6.2026) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ள விவரங்களில் தெரிவிப்பதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டிலும் இதேபோல தங்கத் தகடுகள் சென்னை அம்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு ‘ஸ்ட்ரிப்பிங் சொல்யூஷன்’ (Stripping Solution) தொழில் நுட்ப முறையில் பெருமளவு தங்கம் பிரித் தெடுக்கப்பட்டு திருடப் பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மிகக் குறைந்த அளவிலான, தரம் குறைந்த தங்கமே அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
தங்கமுலாம் பூசியதற்கு 40 வருட உத்தரவாதம் என்று கூறப்பட்ட நிலையில், சில ஆண்டு களிலேயே தரம் குறைந்த தங்கம் தேய்ந்து, உள்ளே இருந்த செம்பு வெளியே தெரியத் தொடங்கியது.
தங்களின் முந்தைய திருட்டு மாட்டிவிடும் என்று பயந்த கும்பல், அதை மறைப்பதற்காகவே கடந்த ஆண்டும் மீண் டும் தங்கமுலாம் பூசுவ தாகக் கூறி நீதிமன்ற அனு மதியின்றி சென்னைக்கு தகடுகளைக் கொண்டு சென்று சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதன் மூலம் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பட்டியல்
இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் பின் வருவோர் குற்ற வாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ளனர்:
கண்டரர் ராஜீவரர் (சபரிமலை மூத்த தந்திரி), பிரசாந்த் (முன்னாள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர்), அஜிகுமார் (முன் னாள் தேவசம்போர்டு உறுப் பினர்), உண்ணிகிருஷ்ணன் போத்தி ரெஜிலால் (தேவசம்போர்டு அதிகாரி) முராரி பாபு (தேவசம் போர்டு அதிகாரி), பங்கஜ் பண்டாரி (சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி) இவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஆன்மீக வட்டாரத்திலும் கேரளா முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
