கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகள்

1 Min Read

கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகள்

  1. பொருளாதார இட ஒதுக்கீடு ஏன் கூடாது?
  2. சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில் இருக்கிற சில கருத்துகளைச் சிலர் மேற்கோள் காட்டி பெரியாரை மைனர் வாழ்க்கையின் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
  3. திருக்குறளை ஏற்றுக்கொண்ட பெரியார் ஏன் நாலடியார் போன்ற நூல்களை ஏற்றுக்கொள்ளவில்லை?
  4. கார்ல்மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு உலகளவில் பெரியார் ஏற்றுக்கொள்ளப்படவில்லையே, என்ன காரணம்?
  5. பெரியார் இன்றைக்கு இருந்திருந்தால் எந்தப்பிரச்சனைக்கு முக்கியமளித்து குரல் கொடுத்திருப்பார்?
  6. தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆனால், முதலமைச்சர் வாயைத் திறக்கமாட்டேன் என்கிறாரே, ஏன்?
  7. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரிடம் பழகியுள்ளீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
  8. பள்ளி மாணவர்களிடம் பரவிவரும் ஜாதிய மோதல்களைச் சரிசெய்ய உங்கள் ஆலோசனை என்ன?
  9. தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது கொள்கையா? செயல்திட்டமா?
  10. இன்றைய தலித் இலக்கியங்கள் பெருமளவில் வருவதற்குக் காரணம் பெரியார்தானா?

இக்கேள்விகளை கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாசிக்க வாசிக்கக் கழகத் தலைவர் அதற்குரிய பதில்களை அடுத்தடுத்து வழங்கினார். கேட்கப்பட்டவை நல்ல கேள்விகள் என்று வெளிப்படையாக மாணவர்களைப் பாராட்டினார். அத்துடன் நேரம் கருதி, கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டனவென்றும், விடுதலை ஞாயிறு மலர், உண்மை ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளிவரும் கேள்விகள் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கு உரிய பதில் கிடைக்கும் என்று கழகத் தலைவர் உறுதியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *