9 வயதில் மேடையேறி, 93 வயதிலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கிவரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, 47 ஆம் ஆண்டாக நடைபெறும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களின் சார்பாக பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதன்முதலாக மேடை ஏறியதன் 84 ஆம் ஆண்டு தொடக்க நாளன்று, பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் அவர்கள், தங்களுக்கு இரண்டு வகுப்புகளை நடத்துகிறார் என்பதை அறிந்த மாணவர்கள் பெருமகிழ்வோடும், வியப்போடும் தமிழர் தலைவரை சிறப்பித்து மகிழ்ந்தனர்.
