திராவிட இயக்க வர லாற்றில் 1938ல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒருமைல் கல்லாகும். இந்தப் போராட்டத்தில் திருச்சி, உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் ஹிந்தி எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 577 மைல்கள் நடந்தே வந்தவர் இவர். 87 பொதுக் கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.
மேலும், சென்னையில் பள்ளி முன் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, மறியல் செய்து கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் இருந்தார்.
இவரின் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற ஒரே அங்கீகாரம் தி.மு.க. சார்பில் அண்ணா வழங்கிய விருதுதான். சுயமரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் விருது வழங்கி சிறப்பிக்க அண்ணா முடிவு செய்தார். இதற்கு இவருடைய பெயரைத்தான் அண்ணா முதன்முதலில் தேர்வு செய்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, முதல்முறையாக ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கு “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்” என்று இவரது பெயரை வைத்து, தொடர்ந்து செயல்படுத்தினார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 64ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (27.6.2026)
