இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது?
* நெருக்கடி நிலை தந்த வரலாற்றுப் பாடங்களை இளைஞர்கள் விரிவாக கற்க வேண்டும். – பிஜேபி அறிவுறுத்தல்
>> மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் என்பது எல்லாம் இப்பொழுதும் நெருக்கடியில் தானே இருக்கிறது!
விளக்கவேண்டும்
*ஒன்றிய அரசுடன் இணக்கமாகச் செல்ல தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது. – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
>> ஒன்றிய அரசின் தேசிய கல்வி, நீட் தேர்வு, EWS, ஜிஎஸ்டியில் நிதிப் பகர்வு, மாநில உரிமைகள், தமிழ்நாடு மீனவர்களை அன்றாடம் கைது செய்யும் படலம், இத்தியாதி பிரச்சினைகளில் எல்லாம் ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு இணக்கமாகச் செல்கிறது என்று சொல்ல வருகிறாரா ஒன்றிய நிதியமைச்சர் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்!
