சென்னை, ஜூன் 27- சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி சோ்க்கை வரும் ஜூன் 29ஆம் தேதி தொடங்கு கிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2026-2027-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்கு சுயகற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி 25.6.2026 அன்று தொடங்கியது.
சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி நிறுவனத்தில் 2026- ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சான்றிதழ், முதுநிலை வணிக நிா்வாகவியல், முதுநிலை கணினி பயன்பாடு ஆகியவற்றுக்குரிய மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 29.6.2026 அன்று முதல் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவா் சோ்க்கை மய்யத்தின் வழியாக சோ்ந்து பயன டையலாம்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 74 கற்றல் உதவி மய்யம் இணையம் மூலமாக மாணவா் சோ்க்கை (http://www.ideunom.ac.in/) விரைவில் தொடங்கப்படும் என சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலை.: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 2026-2027-ஆம் கல்வியாண் டில் பல்வேறு பாடத் திட்டங்களில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கான சுய கற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
இப்பாடப்புத்தகங்கள் வழங்கும் தொடக்க விழா பல்கலைக்கழகத் தலைமையகத்தில் நடை பெற்றது.
விழாவில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவா ளா் பேராசிரியா் ஜி.ஆா்.செந்தில்குமாா் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, புத்தக விநியோகப் பணியைத் தொடங்கி வைத்தாா்.
பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு தல்கள் மற்றும் கற்றல் மய்யக் கற்பித்தல் கொள்கைகளுக்கு ஏற்ப தரமான சுயகற்றல் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
