புதுடில்லி, ஜூன் 25 எதிர்க் கட்சிகளில் இருந்து தலைவர்கள் கட்சி மாறுவதற்கும், கட்சிகள் பிளவு படுத்தப்படுவதற்கும் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான காரணங் களை காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப் படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்த அவமானமே தற்போதைய அரசியல் நகர்வுகளுக்குக் காரணம் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரை தொடர்பான 3 மசோதாக்களை நிறைவேற்றுவதாகப் பிரதமர் மோடியிடம் அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.
ஆனால், அவரால் மக்களவையில் 298 வாக்குகளுக்கு மேல் பெற முடிய வில்லை. பழிவாங்கும் அரசியல்: அன்று சந்தித்த அவமானத்திற்குப் பழிவாங்கவே, இன்று திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சி களை உடைக்கும் அரசியலில் அவர் ஈடுபட்டுள்ளதாக ரமேஷ் சாடி யுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மக்களவையில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை, அதாவது 352 வாக்குகளின் பலம் தேவைப்படுகிறது.
“பாஜகவின் உடனடி இலக்கு தொகுதி மறுவரையறை மசோதா என்றாலும், அது அவர்களின் முதல் படி தான். அவர்களின் உண்மை யான இறுதி இலக்கு இந்தியா வில் நடைமுறையில் உள்ள இடஒதுக் கீட்டை முற்றிலும் ஒழிப்பதுதான்.” என்று – ஜெய்ராம் ரமேஷ் கூறினர்
தற்போதைய நிலவரப்படி, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளையும் உடைத்ததன் மூலம் பாஜகவிற்கு கூடுதலாக 26 எம்பிக்கள் கிடைத் துள்ளனர். இதன் மூலம் அவர்களின் பலம் 298இல் இருந்து 324 ஆக உயர்ந் துள்ளது. இருப்பினும், தங்களின் இலக்கான 352-அய் எட்ட அமித்ஷா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மாற்றுக்கட்சிக்குச் சென்றவர் களை மீண்டும் சேர்க்கக் கூடாது”
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்தும், காங்கிரஸிலிருந்து வெளியேறிய இளம் தலைவர்கள் குறித்தும் ஜெய்ராம் ரமேஷ் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இக்கட்சி அரசுக்குள்ளேயே செயல் படும் அதிகார மய்யங்களால் தூண் டப்பட்டது என்றும், இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. எதையும் நிரூபிக்க வழியில்லை என்றாலும், இது இளைஞர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது.
ஜனநாயக அமைப்புகள் வெறும் போராட்ட இயக்கங்களை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதால், நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சுயநலத்திற்காக காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இளம் தலைவர்களை, எக்காரணம் கொண்டும் மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
