சத்தீஸ்கர், ஜூன் 25– பிஜேபி ஆளும் சத்தீஸ் கரில் மதுவில் நஞ்சு கலந்து கொடுத்து எட்டு பேர் கொலை செய்யப் பட்டனர்.
கொலை செய்த பிறகு தப்பியோடாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டு துக்கம் விசாரிப்பது போல நடித்து குடும்பத்தாருக்கு சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து கிராம மக்கள் ஜூன் 6 அன்று அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்ட 7 பேரின் உடல்களைத் தோண்டி எடுத்து காவல் துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பினர் ஒருவரது உடல் எரியூட்டப் பட்டுவிட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு ராம் சஹய் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டு, அவர் மீது 8 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் அறிக்கையின்படி, புதாலு சாகு (60), புத்ராம் ஜெய்ஸ்வால் (60), சத்து ராம் சாகு, வினோத் குமார் சாகு (38), கஜானந்த் மன்ஜி (55), சைதுராம் சாகு (58), மகேத்ரு ராம் சாகு (41) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
