‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

1 Min Read

சென்னை, ஜூன் 23- சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அதில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் இந்தி கட்டாயம் என மும்மொழியை அமல்படுத்துதலை கண்டித்தும், நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்தும் தமிழ் மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (22.6.2026) நடந்தது.

சென்னை மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கும், தமிழக தவெக அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி அளித்த பேட்டி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டு மாணவர்களும் போராடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் ஒலித்து வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளை வஞ்சிக்கக்கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு தொடர்ந்து உயிர்க்கொல்லி தேர்வாக உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும்.

மேலும், முகமூடி அணிந்து ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கைகளை திணிக்க பார்க்கிறது. மாணவர்களின் கனவை சிதைக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் பெயரை முதலமைச்சர்ர் மாற்றியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் முதல்வன் திட்டம் மாணவர்களுக்கு பெரிய அளவில் நல்வாய்ப்பாக இருந்து வருகிறது. எண்ணற்ற மாணவர்களை நான் முதல்வன் திட்டம் உருவாக்கியுள்ளது. நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றுவதே முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அச்சத்தின் வெளிப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *