கிருட்டினகிரி மாவட்டம் அரசம்பட்டி காந்திநகர் திராவிடர் கழக ஆர்வலர் விடுதலை வாசகர் வழக்குரைஞர் தீ.விவேகானந்தனின் தந்தையார் தமிழ்நாடு மின்சார வாரிய (பணி நிறைவுபெற்ற) அலுவலர் தீர்த்தகிரி (வயது71)உடல்நலக் குறைவால் 23.06.2026இல் முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது மறைவிற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மாவட்டத் தலைவர் த.அறிவரசன், மேனாள் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இல.குமார், பகுத்தறிவாளர் கழகம் நூலகர் மா.ஜீவரத்தினம், ப.பிரதாப், ப.ஜெயக்குமார், குமார், சக்திவேல் உள்பட கழக நிர்வாகிகளும் தோழர்களும் கலந்து கொண்டு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
