சின்னாளப்பட்டி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 – ஆண்டு விழா” மாநாட்டிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் அவர்களுக்குச் சின்னாளப்பட்டி பிரிவில் 26.6.2026 அன்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில், விருதுநகர் நகர தலைவர் கா.நல்லதம்பி, திருநாவுக்கரசு, நகர தலைவர் கா.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும்.

தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம்.

வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன்,
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்

பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன்
பழனி மாவட்ட கழகத் தலைவர்

பொன்.அருண்குமார்
பழனி மாவட்டச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *