டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவல்.
* திரிணாமூல் காங். தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்: ரிதப்ரதா பானர்ஜி கோஷ்டி அதிரடி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 4 நாட்களில் 3 உயிரிழப்புகள்: தமிழ்நாட்டில் நீட் (NEET) தேர்வு எழுதுவோர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தி இந்து:
* அமெரிக்காவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந் தத்திற்கு எதிராக பிரதமருக்குத் தொழிற் சங்கங் கள் கடிதம்: விவசாயிகள், மீன்பிடித் தொழிலா ளர்கள், கோழிப்பண்ணை வர்த்தகர்கள், மதுபானம் தயாரிப்பாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங் கங்களின் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. அமெரிக் காவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானவை என்பதால், அவற்றை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் அதில் வலியுறுத்தியுள்ளனர்.
தி டெலிகிராப்:
* கிராமப்புற ஊதிய உயர்வு புள்ளிவிவரங்களை மிகைப்படுத்திக் காட்ட ‘தரவுகளில் முறைகேடு’ செய்ததாக ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.2018-ஆம் நிதியாண்டு முதல் 16.8 கோடி (168 மில்லியன்) வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி, வேலைவாய்ப்பு என்பதற்கான வரையறையில் ரிசர்வ் வங்கி (RBI) மூலம் மாற்றங்களைச் செய்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரித்துள்ளதாக காட்ட மோடி அரசு முயன்றதாக 2024-லேயே தாங்கள் குற்றஞ் சாட்டி இருந்ததாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உச்ச நீதிமன்றம்: கொலீஜியத்தின் தேர்வு செயல்முறை நீதித்துறை ஆய்வுக்கு உட்படாது, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வராது.அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியங்கள் தேர்ந்தெடுப்பது நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்றும், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
– குடந்தை கருணா
