அறந்தாங்கி மாவட்டத்தில் இல்லங்கள் தோறும் கழக இளைஞரணியினரோடு சந்திப்பு.

1 Min Read

அறந்தாங்கி,, ஜூன் 23- 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சுற்றுப்பயணம் அறந்தாங்கி,  பாலசுப்பிரமணியபுரம்,  அத்தாணி, திருவாப்பாடி, கட்டுமாவடி, மணல்மேல்குடி, மீமிசல், நிறைவாக புதூர். ஆகிய பகுதிகளில் கழகத் தோழர்கள் மற்றும் இளைஞரணி யினரை இல்லங்கள் தோறும் சந்தித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டு கோளின்படி 1000 இளைஞர்கள் அறப்போராட்ட கள வீரர்கள் பட்டியலில் அறந்தாங்கி மாவட்ட கழகத்தின் சார்பில் 15 இளைஞர்கள் பட்டியல் வழங்கிடவும்,

கழக இளைஞரணி சார் பில் அந்தந்தப் பகுதிகளில் தொடர்ச்சி யான பரப்புரை வாயிலாக இளைஞர்களை இயக்கத்தில் இணைத்திடவும்,

ஜூன் 25, 26, 27, 28, ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் நடைபெற உள்ள 47ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு அறந்தாங்கி மாவட்ட சார்பில் 5 இளைஞர்களை அனுப்பி வைப்பது எனவும் உறுதி அளித்துள்ளனர்.

மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, மாவட்டச் செயலாளர் ஜெகதை.குமார் ஆகியோர் பயணத்தை மேற்கொண்டனர். அந்தந்தப் பகுதி தோழர்கள் ஆங்காங்கே கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *