‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்குடி வருகை தரும் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு! சிவகங்கை – காரைக்குடி கழக மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

2 Min Read

சிவகங்கை, ஜூலை 22- சிவகங்கை – காரைக்குடி மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 19.7.2026 அன்று சிவகங்கையில் பொதுக்குழு உறுப்பினர் இரா.புகழேந்தி இல்லத்தில் மாவட்டக் கழகக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் தலைமையில், காரைக்குடி மாவட்டக் கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.அனந்தவேல், மாவட்டச் செயலாளர் பெரு.ராசாராம், காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாநில ப.க. அமைப்பாளர் முத்துக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலெட்சுமி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் மாநாடுசிறப்பாக நடைபெற தங்களது ஒத்துழைப்பையும் கருத்துகளையும் வழங்கினார்கள்.

மாவட்டத்தலைவராக மிகச் சிறப்பாக தொண்டாற்றி இயக்கத்திற்கு பெருமை சேர்த்த பொதுக்கூழு உறுப்பினர் இரா.புகழேந்திக்கு கழக காப்பாளர்கள் வழக்குரைஞர் ச.இன்பலாதன், சாமி.திராவிடமணி இருவரும்பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்கள். மாவட்டத்துணைத்தலைவர் ஜெ.தனபாலன், மாவட்ட பகுத்தறிவாளர்கழகத்தலைவர் சு, இராசாங்கம் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள்.

நிறைவாக மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய தொண்டுகளை பட்டியலிட்டும், அவர்தம் ஓயாத உழைப்பை நாம் போற்றி பாராட்டுவதுடன் மேலும் உற்சாகம் அளிக்கும் விதமாக தோழர்களாகிய நமது பணி அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தீர்மானங்கள்

கடந்த 04-07-2026 அன்று சேலம் மாநகரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாற்றுவது.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் வரும் 22-08-2026 அன்று “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு” திறந்தவெளி மாநாட்டினை சிவகங்கையில் நடத்திட வாய்ப்பு அளித்த  கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழர் தலைவர் தலைமையில் வரும் 22.08.2026 அன்று “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு” திறந்தவெளி மாநாட்டினை சிவகங்கை, காரைக்குடி மாவட்டக் கழகத்தினர் இணைந்து மிகச்சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

நீட் தேர்வு, உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் ஆறு குழுக்களாக இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு 01.08.2026, 02.08.2026 இரண்டு நாட்களும் காரைக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் பயணக்குழுவிணர்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பது என முடிவு செய்யப்பட்டது.

திறந்தவெளி மாநாட்டிற்கு நன்கொடை அறிவித்தோர்

காரைக்குடி மாவட்ட கழகம். 25000/-

திருப்புவனம் ராசாங்கம் 10000/-

காரைக்குடி சாமி.திராவிடமணி 5000/-

காரைக்குடி செயலெட்சுமி 5000/-

காரைக்குடி என்னாரெசு பிராட்லா 5000/-

வைகை தமிழ்வாணன் 5000/-

ஒ. முத்துக்குமார் 5000/-

காரைக்குடி பிரவீன் 3000/-

தேவகோட்டை ஜோசப் 2000/-

திருக்கோட்டியூர் கார்த்திகேயன் 1000/-

வைகை தங்கராசா. 1000/-

வைகை பிரபாகரன் 1000/-

வேம்பத்தூர். செயராமன் 1000/-

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *