சேலம் பொதுக்குழுவுக்கு இளைஞர்கள் பட்டியலோடு செல்லத் தீர்மானம் சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மழவராயநல்லூர், ஜூன் 23- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 20.6.2026 அன்று மாலை 6 மணிக்கு குமார குடி மழவராய நல்லூர் சுமதி பெரியார்தாசன் இல்லத்தில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்றார்.

மாவட்டத் துணைத் தலைவர் அன்பு சித்தார்த்தன் கடவுள் மறுப்பு கூறினார்.

மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கோ.வி.பெரியார்தாசன் மாவட்டத் துணை தலைவர் அன்பு சித் தார்த்தன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தலைமை ஏற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சேலம் பொதுக்குழுவின் நோக்கங்களையும் ஆசிரியர் அவர்கள் கேட்ட இளைஞர்கள் பட்டியலின் அவசியத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர் தஞ்சை மா.அழகிரி சாமி தஞ்சை.குணசேகரன், புவனகிரி ஒன்றியத் தலைவர் என்.எ.இராமலிங்கம், காட்டு மன்னார்கோயில் ஒன்றியத் தலைவர் இரா.செல்வ கணபதி,

காட்டுமன்னார்கோயில் நகர தலைவர் பொன்.பஞ்ச நாதன், காட்டுமன்னார் கோயில் நகரச் செயலாளர் ராஜ பிரபு,காட்டுமன்னார் கோயில் ஒன்றிய அமைப்பாளர் எஸ்.சண்முகசுந்தரம், கீரப்பாளையம ஒன்றியத் தலைவர் அசோக், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், திருமுட்டம் ஒன்றியத் தலைவர் பெரியண்ணசாமி ஒன்றியச் செயலாளர் இரா.ராஜசேகரன் ஒன்றிய அமைப்பாளர் பெரியார் தொண்டன், வலசக்காடு கிளைத் தலைவர் அரங்க.வீரமணி மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி.சிலம்பரசன்,

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.பஞ்சநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதி பெரியார்தாசன், மாணவர் கழகத் தோழர் ப.அஸ்வின் தோழர் கவியரசி மழவராயநல்லூர் கிளைத் தலைவர் மா.செல்வராசு, மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் தெ.ஆறுமுகம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பா.ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.

தீர்மானங்கள்

புவனகிரி ஒன்றியச் செய லாளர் மறைந்த ஏ.பி.ராமதாஸ் மற்றும் விழிக்கொடை, உடற்கொடை செய்த பெருமாத்தூர் பெரியார் பெருந் தொண்டர் பழனியாண்டி ஆகியோர் மறைவுக்கு மாவட்டக் கழகம் சார்பில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க கொள்கை அர்ப்பணிப்புடன் உள்ள 20 இளைஞர்களைச் சேர்த்து பட்டியல் அளிப்ப தென்ன தீர்மானிக்கப்பட்டது.

கழக ஏடுகளான விடுதலை, உண்மை ஆகியவற்றிற்கு நிறைய அளவில் சந்தா சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

கிராமப்புற பிரச்சாரத்தின் படி வருகிற ஜூலை மாதம் 12 ஆம் தேதி கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மதுராந்தக நல்லூரில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக  மாவட்ட துணைத் தலைவர் அன்பு சித் தார்த்தன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *