கேரளத்தில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ நோய்த் தொற்று எதிரொலி! கண்காணிப்பு வளையத்தில் மதுரை அரசு மருத்துவமனைகள்

மதுரை, ஜூன் 22- கேரளத்தில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று எதிரொலியாக மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஷிகெல்லா தொற்று

ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது. இது அசுத்தமான உணவு, குடிநீர், சுகாதாரமற்ற சூழல், பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவும் குடல் நோயாகும். கோழிக் கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தத் தொற்று, மனிதர்களின் குடலைத் தாக்கி கடுமையான வயிற்றுப் போக்கு, தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான பாக்டீரியா ஆகும். இவை 10 முதல் 100 வரை எண்ணிக்கையில் உடலுக்குள் சென்றாலே எளிதில் தொற்றை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் சுகாதாரமாக இருந்தால், இந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டத்தில் இதுவரை ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இத்தொற்றில் இருந்து மக்களை காக்கவும், பாதிப்புகளைத் தடுக்கவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்காக மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்க ஓ.ஆர்.எஸ். கரைசல்கள், குளுக்கோஸ் ஆகியவை கையிருப்பில் உள்ளன.

பாக்டீரியாவை துல்லியமாக கண்டறிய மலம், ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், காய்ச்சிய நீரைப் பருகுதல் போன்ற சுகாதார விழிப்புணர்வை மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

குறிப்பாக, குழந்தைகள், முதியோர் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *