கரூர், ஜூன் 22- கரூர் மாவட்ட கழகத் தலைவர் ஆசிரியர் குமாரசாமி கடவூர் ஒன்றியச் செயலாளர் இரா.கார்த்தி, வாழ்விணையர் பரணிலட்சுமி ஆகியோரின் இல்லத்தினை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னதாக தந்தை பெரியார் படத்தினை மாவட்ட செயலாளர் காளிமுத்து திறந்து வைத்தார். அண்ணல் அம்பேத்கர் படத்தினை திமுக அரசு வழக்குரைஞர் மீரா குடியரசு திறந்து வைத்தார். தோழர் கார்த்தியின் தந்தை ராஜு தாய் பழனியம்மாள் ஆகியோர் படத்தினை சே. அன்பு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் காப்பா ளர் வே,ராஜு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத் தலைவர் பெருமாள் அமைப்பாளர் விடுதலை, இளைஞர் அணி தோழர்கள் காந்திகிராமம் ராஜா, குமார் டைலர், நைஸ் சபாபதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராஜாமணி மற்றும் கழகத் தோழர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
