பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா கழகப் பொதுக்கூட்டம் பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா கழகப் பொதுக்கூட்டம்

2 Min Read

பட்டுக்கோட்டை, ஜூன் 22- திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப கடந்த 07.06.2026 அன்று பூக்கொல்லை கடைவீதியில் கழக மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் சேது பாவா சத்திரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளரும், மேனாள் ஒன்றிய பெருந்தலைவருமான மு.கி. முத்துமாணிக்கம், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்குரைஞர் குழ.செ. அருள் நம்பி, வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செ.ஞான பிரகாசம், சேது பாவாசத்திரம் ஒன்றிய கழகத் தலைவர் சி .செகநாதன், ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சண்முகவேல் ஆகியோர் முன்னிலையிலும்,  பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் வரவேற்புரையுடனும் நடை பெற்றது.

கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேரா வூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா. அசோக் குமார் கலந்து கொண்டு பல் வேறு கருத்துகளை எடுத்து வைத் தார்.

கூட்டத்தில் கழக சொற் பொழிவாளர் ஆரூர் தேவ.நர்மதா கலந்து கொண்டு திராவிட இயக்கத்தின்செயல்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி செய்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலும், திராவிடர் இயக்கத்தை அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்லும் தலைவராக இளம் தலைவர் உதயநிதி திகழ்ந்து வருகிறார் எனவும், எனவே இளைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கத்தினுடைய அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து அரசியல் மய்யப்படுத்துவோம்.என்றும் எடுத்து கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறப் பானதொரு உரை நிகழ்த்தினார் .

கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப. சேகர், மேனாள் சேது பாவா சத்திரம் ஒன்றிய திமுக செயலாளர் கு. சின்னப்பா மேனாள் மாவட்ட குழு உறுப்பினர் கே. காமராஜ், கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சு.வசி, மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் க.சசிகுமார், நகர கழகத் தலைவர் சி. சந்திரமோகன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செ.பொ. மதியழகன், திமுக மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகம்மது, ஒன்றிய இளைஞ ரணிச் செயலாளர் மதன், நெல்லியடிக்காடு முருகேசன், அகமது யாசின், முனைவர் அசன் முகைதீன் உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார் .

கூட்டத் தொடக்கத்தில் மாவட்ட கழக துணை செயலா ளர் சோம. நீலகண்டன் வழங்கிய மந்திரம் அல்ல? தந்திரமே? என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது.

பேராவூரணி கழக ஒன்றியச் செயலாளர் சித்தாதிக்காடு
அ. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *