பட்டியலில் 15 இளைஞர்களை இணைத்திடுவோம் காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

தமிழர் தலைவர் கட்டளைப்படி
1000 இளைஞர்கள் அறப்போராட்டக் கள வீரர்கள்

காரைக்குடி, ஜூன் 22- 20-06-2026 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் கட்ட ளைப்படி  1000 இளைஞர்கள் அறப்போராட்ட களத்திற்கு  காரைக்குடி மாவட்டம் சார்பில் 15 இளைஞர்களுக்கான பட்டியலை வழங்குவது. எனவும். தொடர்ச்சியாக எந்தக் கட்சியும் செய்யாத பணியினை நமது இயக்கம் செய்து கொண்டு வருகிறோம். அதற்கான பணிகளை நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனுக்குடன் இயக்கத்தை இயக்கிக் கொண்டே செய்து வருகிறார். மேலும் அரசியல் ஆட்சி மாற்றத்தால் தோல்வியடைந்து சோர்வடைந்தவர்களையும் களத்திற்கு அழைத்துச் செல்லவும். ஒவ்வொரு நாளும் ஆசிரியரின் அறிக்கைகள் போன் றவற்றைப் பற்றியும் தெளிவாக காரைக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, தலைமையுரையாற்றி நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினார். இறுதியாக தீர்மானங்களையும் வாசித்தார். மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, முன்னிலை வகித்தார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் கவிஞர் கொ. மணிவண்ணன், கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி, வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை யாற்றினார். தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, பங்கேற்று, இளைஞர்களை இயக்கத்தில் இணைப்பதற்காக கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுத்துள்ள கட்டளையையும் அதன் நோக்கத்தையும் விளக்கி உரையாற்றினார்..

நிகழ்வில் மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், தேவகோட்டை நகரத் தலைவர் வீ.முருகப்பன், பகுத்தறிவாளர் கழக ஆலோசகர் சு.முழுமதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன், பெரியார் வீர விளையாட்டு கழக தஞ்சை மாவட்டச் செயலாளர் சிகாமணி, ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தனர். மாநகரச் செயலாளர் அ. பிரவீன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

பெரியார் பெருந்தொண்டர் ச.கைவல்யம் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும் வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.

கழகத் தலைவர் தமிழர் தலைவரின் கட்டளையின்படி 1000 இளைஞர்கள் அறப் போராட்டக் களத்திற்கு வீரர்களை இணைக்கும் பணியில், காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் 15 இளைஞர்களின் பட்டியலை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் ஒன்றியங்கள் தோறும் தொடர் பரப்புரைகளை மேற்கொள்வதென்று தீர்மானிக் கப்பட்டது.

விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களின் சந்தாக்களைப் புதுப்பித்தும், புதிய சந்தாக்களைச் சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்: டாக்டர் சு.முழு மதி, மாவட்ட ஆலோசகர், பகுத்தறிவாளர் கழகம். செயலாளர்: இ.ப. பழனிவேல், மாவட்டத் துணைத் தலை வர், திராவிடர் கழகம்  ஒருங் கிணைப்பாளர் : இரா.முத்து லட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *