நாகர்கோவில், ஜூன் 21– குமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் இணையர்,பெண்கள் உரிமைக்காக போராடிய போராளி அன்னை நாகம்மையார் நினைவு நாள் சிறப்பு கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர், கழக பொறுப்பாளர்கள் ஞா.பிரான்சிஸ், கழக குமரி நகரச் செயலாளர் க.யுவான்சு தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, சி.அய்சக் நியூட்டன், எ.ச.காந்தி, நாகராஜன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்டக் கழகம் சார்பாக நடைபெற்ற அன்னை நாகம்மையார் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்
Leave a Comment
