* திராவிடர் கழகத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை நகலை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (21.06.1986).
* சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கப்பட்ட நாள் இன்று (21.06.2007).
* ஜொகன்னஸ் ஸ்டார்க் நினைவுநாள் இன்று (21.6.1957)
மேற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர்களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டு பிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* “உலக இசை நாள்” இன்று (21.6.1982)
இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மவுரிக் ஃபிளியூரெட் இருவரும் இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்நாளை உருவாக்கினார்கள். அதன்பிறகே பாரிஸில் 1982 ஆம் ஆண்டு முதல் ‘இசை நாள்’ கொண்டாடப்பட்டது. மென்மையான இசையைக் கேட்கும்போது மன அழுத்தத்தின் போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எந்த சோகமாக இருந்தாலும் பிடித்த இசையைக் கேட்கும்போது மனது இலகுவாகிறது.
*உலக மனிதநேய நாள் இன்று (ஜூன் 21)
(world humanist day) உலக மனித நேயவாதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலக மனிதநேய நாளாக கொண்டாடுகிறார்கள்.
*உலக சுகாதார நிறுவனம் அய்ரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்த நாள் இன்று (21-06-2002).
* சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாடத் தடையில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Y.M.இக்பால்) அவர்கள் உத்தரவு பிறப்பித்த நாள் இன்று (21-06-2010).
