தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்!

2 Min Read

சென்னை, ஜூன் 20– பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாய்திறப்பதே இல்லை என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் கடும் அமளி ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் (18.6.2026) தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (19.6.2026) நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஆஸ்டின் (திமுக): தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர். ஆனால், தவெக ஆட்சியில் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள் ளனர். இந்த அரசு நிர்வாகத் தோல்வி அடைந்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் உரையில் எந்த திட்டமும் இல்லை. இது ஒரு வெற்று உரை. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தி தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாய் திறப்பதே இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எப்போது, என்ன பேச வேண்டும் என்பது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தெரியும். கொளத்தூரில் அவர் 5 நிமிடங்கள் பேசியதற்கே என்ன ஆனது என்று உங்களுக்கே தெரியும்.

(அமைச்சர் இவ்வாறு கூறியதும், திமுக உறுப்பினர்கள் எழுந்து அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பதிலுக்கு, தவெக உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் அமளி ஏற்பட்டது.

உடனே, பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகர் எழுந்து, அனைத்து உறுப்பினர்களும் அமருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர். விவாதம் தொடர்ந்தது.)

ஆஸ்டின்: தவெக ஆட்சியில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் வாயே திறப்பது இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: திமுக ஆட்சியின்போது, தூத்துக் குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 36 மணி நேரம் ஆகியும் வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. அப்போது, முதலமைச்சர், அமைச்சர்களும் வாய் திறக்க வில்லையே.

ஜி.வி.மார்க்கண்டயேன் (திமுக): அந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில், முதல் தகவல் அறிக்கை (எஃப்அய்ஆர்) பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

ச.ஜோசப் விஜய் முதலமைச்ச ராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண் அதிரடி சிறப்புப்படை’, மாவட்டங்களில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படை ஆகிய 3 திட்டங்களும் தோல்வி அடைந்துள்ளன. தவெக ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.

ஒரே மாதத்தில் கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. ரவுடிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். நாட்டிலேயே அமைதியான மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு இனிமேல், அச்சமான மாநிலம் ஆகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *