பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஜூன் 20- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா நாளினை முன்னிட்டு நேற்று (19.06.2026)  காலை 9 மணியளவில் யோகா பயிற்சி குறித்த செயல் முறை விளக்க விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமை வகித்து யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தி னர் திருச்சி வேதாத்ரி மகரிஷி யோகா மய்யத்தின் யோக குரு ச.சின்னையன் உடலையும் உள்ளத்தையும் இணைக்கும் ஒரு கலைதான் யோகா என்றும், இக்கலையினை நாள்தோறும் மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் மாணவர்களின் நினைவுத்திறனும் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

மனிதன் நோயின்றி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்றால் யோகாப்பயிற்சியினை நாள்தோறும் செய்ய வேண்டும் என்று கூறி யோகா குறித்த பல் வேறு நலவாழ்வுத் தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, யோகா பயிற்சியினை செய்து காட்டினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் யோகா பயிற்றுநர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் யோகாப் பயிற்சியினை மேற்கொண்டனர். பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ரா. தினேஷ், ஒருங் கிணைப்பாளர்கள் பேரா. பிரிய தர்ஷினி, பேரா.சேதுராஜ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *