‘நீட்’ என்றாலே ஊழல் தானா? ‘நீட்’ தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி வாயிலாக ராஜஸ்தானில் விற்பனையாம்!

ஜெய்ப்பூர், ஜூன் 20 இந்தியாவில் இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து, ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறுதேர்வு நடத்தப்பட வுள்ளது.

இந்நிலையில், ‘நீட்’ மறுதேர்வுக் கானது எனக் கூறி, சமூக ஊட கங்கள் வழியாகப் போலியான வினாத்தாளை விற்றதாகக் கூறி, 19 வயது இளையர் ஒருவர் 19.6.2026 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டார்.

ஆகாஷ் சவுதரி என்ற அந்த இளையர், டெலிகிராம் செயலி வழியாக அம்முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக் கப்படுகிறது. இந்தியாவில் ஜூன் 22ஆம் தேதிவரை ‘டெலிகிராம்’ செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘விபிஎன்’ தொழில் நுட்பம் மூலமாக அவர் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

போலி வினாத்தாளை விற்பதற்காக அவர் ‘பேப்பர் மாஃபியா’ என்ற குழுவை டெலிகிராமில் உருவாக்கியதாகக் கூறப் பட்டது. ஆகாஷிடமிருந்து ஒரு கைப்பேசி, ‘நீட்’ கையேடு, பிற ஆவணங்கள் ஆகிய வற்றைக் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்த விவகாரத்தில் மற்றவர் களுடன் அவருக்குள்ள தொடர்புகள், அவரது வங்கிக் கணக்குகள், அவரால் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் ஆகியன குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர் போலி ‘நீட்’ வினாத்தாளை 4,000 ரூபாய்க்கு விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ராஜஸ்தானின் சூரு மாவட்டத்தைச் சேர்ந்த அவர் 12ஆம் வகுப்புவரை படித்தவர் என்றும் போட் டித் தேர்வுகளுக்குத் தயா ராகி வந்தார் என்றும் கூறப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *