மணவிலக்கு வழக்குகளில் பெயர் விவரங்களை வெளியிடக் கூடாது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

2 Min Read

தமிழ்நாடு

மதுரை, ஜூன் 18– மணவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வழக்கு ஆவணங்களில் வெளியிடக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

மணவிலக்கு வழக்குகள்

கணவன், மனைவி மணவிலக்கு வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் சகிப்புத்தன்மை இன்மையும், திருமண உறவு முறிவு போன்றவை அதிகரிக்கிறது. தனிக்குடும்பம் என்ற கருத்தாக்கம் சிதைந்து வருவது திருமண வாழ்க்கை சீராக செல்வதற்கு பெரும் தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அன்றாட வாழ்வில் மனஅழுத்தம் வெளிப்படுகிறது.

மனித உணர்ச்சிகள்

திருமணத்திற்கு பிறகு இணையர் களுக்கு இடையே பகிரப்படும் அன்பு, உணர்வுப்பூர்வமான நெருக்கம் மற்றும் அந்தரங்கமான உறவு ஆகியவை மனித உணர்ச்சிகளின் இயல்பான வெளிப்பாடுகளாகும். இவை வாழ்க்கையில் ஆழ்ந்த மன அமைதியையும், புத்துணர்வையும் அளிக்கின்றன. இத்தகைய தோழமை, உணர்வுப்பூர்வமான விரக்தி அல்லது உளவியல் ரீதியான துன்பத்துடன் போராடுவோரின் உயிர் காக்கும் ஆதரவாக மாறுகிறது.

மனநோய் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய திருமண வழக்குகள் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது கடுமையான பாதிப்பு களை ஏற்படுத்தும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் அடையாளத்தை பொதுவெளி யில் வெளிப்படுத்துவது சமூகத்திற்கு ஒரு கேடாக அமையும். இதை தவிர்க்க வேண்டும்.

விவரங்களை வெளியிடக்கூடாது

இதனால் வழக்கின் தீர்ப்புகள், உத்தரவுகள், மனுக்கள் அல்லது நீதிமன்ற பதிவேடுகளில் வழக்கில் தொடர்புடையவர்களை எக்ஸ் மற்றும் ஒய் என்றோ அல்லது வழக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அடையாளம் மறைக்கப்பட்ட பிற பெயர்களில்தான் விவரிக்கப்பட வேண்டும்.

எனவே திருமண வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களும் கடுமையான மனநல கோளாறுகள் மற்றும் மனநோய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து அடையாளத்தை மறைத்து வேறுவகையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *