தாம்பரத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

தாம்பரம், ஜூன் 18– 05.06.2026 அன்று மாலை திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கழக சார்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் வரவேற்பு உரை யாற்றினார்.

சிறப்புரையாற்றிய கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அதிரடி.அன்பழகன் ஆகியோர் கலைஞரின் வாழ்நாள் சிறப்புகளை எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி மிக அற்புதமான உரையாக கலைஞரின் உழைப்பை தியாகத்தை அவருடைய ஆட்சி காலத்தில் கிடைத்த உரிமைகளை எல்லாம் மீட்டெடுத்து பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து வென்றெடுத்த ஒரு மகத்தான தலைவர் டாக்டர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்கள்.

கூட்டத்திற்கு கழகத் தோழர்களும் தோழமைக் கட்சியை சேர்ந்த தலைவர்களும் மற்றும் பொதுமக்களும் வந்திருந்து கேட்டு மகிழ்ந்தனர்.

நிறைவாக தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மண்ணிவாக்கம் அருணா பத்மாசூரன் நன்றியுரை ஆற்றினார்.

கூட்டத்தில் மு.நாகவல்லி, புஷ்பலதா பூங்கொடி, அ.ஓவியா, சந்தா ஜெய்கணேஷ், தி.மு.கழக செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், ம.தி.மு.க பகுதிச் செயலாளர் துரை.மணிவண்ணன், சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், பி.சி. ஜெயராமன், செங்கை சுந்தரம், தாராசுரம் இளங்கோவன், தமிழ்ச்செல்வன், சீர்காழி ராமண்ணா, ந.கரிகாலன், டி.இராஜா, மு.மதியழகன், கழக வழக்குரைஞர் இரா,உத்திரக்குமரன், மா.குணசேகரன், செ.முடியரசன், பி.எம்.அறிவுச்சுடர், அ.கருப்பையா, கு.சோமசுந்தரம், ம.தி.மு.க.. சிறை சேகர், சிவக்குமார், மா.குமார் பிச்சை வள்ளிநாயகம். ப.கார்த்தி கேயன், நா.காளிமுத்து, எம்.எஸ்.ராமச்சந்திரன், மு.மணிமாறன், பொழிசை க.கண்ணன், சா.தாமோ தரன், மொ.பிரபாகரன், லொ.முத்துக் குமரன், முரளிதரன், ஆர்.ராமச் சந்திரன், செ.சந்திரசேகரன், தும்மா பிரான்சிஸ், இனியவன், பெஅண்ணாதுரை, தனசேகரன் மற்றும் கழக பொதுக் குழு உறுப் பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *