எடமேலையூர், ஆக.4 மன்னார்குடி கழக மாவட்டம் எடமேலையூர் திராவிடர் கழகக் கிளைச் செயலாளர் ந.லெட்சுமணனின் துணைவியாரும், லெ.ஜெகதாதாரணி, லெ.ஜெயபிரபா, லெ.ஜெயநளினி, லெ.ஜெய பாலா ஆகியோரின் தாயாரும், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை வீ.சுந்தர்ராஜன் ஆகியோரின் மாமியாருமான, லெ.ரூபாவதி அவர்கள் கடந்த 14.07.2026 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
படத்தினை திறந்து
நினைவேந்தல் உரை
அம்மையார் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு 2.08.2026 அன்று காலை 11 மணி அளவில் எடமேலையூர் அத்தாணியார் தெரு லெட்சுமணனின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜர் தலைமையேற்று நினைவேந்தல் உரையாற்றினார். மன்னார்குடி மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்டக் குழு உறுப்பினருமான இரா.இராஜமாணிக்கம் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
மன்னார்குடி மாவட்டக் கழக தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி, மன்னை மாவட்ட கழகச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்டக் கழக செயலாளர் அ.அருணகிரி, நீடாமங்கலம் ஒன்றிய கழக துணைத் தலைவர் எடமேலையூர் பி.வீராசாமி, கும்பகோணம் மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்று நினைவேந்தல் உரையாற்றினர்.
அத்தாணியார் தெரு இளைஞர் நற்பணி மன்ற கவுரவத் தலைவர் வீ.கவுதமன், செயற்குழு உறுப்பினர் சிவாஜி, பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், நல்லாசிரியர் தலைமை ஆசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி, லட்சுமணன் ரூபாவதி ஆகியோரின் மூன்றாவது மகள் லெ.ஜெயா நளினி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
நிறைவாக கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் நினைவு நாள் கூட்டம் நடை பெறும் நோக்கம் பற்றியும், லட்சுமணன் அவர்கள் இயக்கப் பணியாற்றுவதற்கும், அவருடைய வாழ்விணையர் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதனைப் பற்றியும், கழகப் பொறுப்பாளர்களுக்கு உறவுகளின் உறுதுணையான செயல்பாடுகள் பற்றியும், அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர்களின் மறைந்தவரின் சிறப்பினைப் பற்றிப் பேசி பெருமைபடுத்தாமல், பார்ப்பனி யம் எந்த அளவுக்கு இந்த நிகழ்வினை ‘கருமாதி’ என்ற பெயரில் நம்மை இழிவு படுத்துகிறது என்பதைப் பற்றியும், எடுத்துக் கூறி அம்மையாருக்கு வீரவணக்கத்தினையும், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் ஆர் .எஸ்.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், மன்னார்குடி மாவட்ட கழக துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி, மன்னார்குடி ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர கழகத் தலைவர் .செ..தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சாவூர் விடுதலை வாசகர் வட்டச் செய லாளர் ஏ.வி.என்.குணசேகரன், தஞ்சை மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், பகுத்தறிவாளர் கழக மன்னார்குடி மாவட்டச் செயலாளர் தங்க.வீரமணி, புலவர் செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், இரா.சிவக்குமார், திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் கோ.பிளாட்டோ, தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மநல்.பரமசிவம், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் குழந்தை.கவுதமன், நெடுவாக்கோட்டை கிளைக் கழகச் செயலாளர் வெ.விமல், கண்ணந்தங்குடி கீழையூர் கிளைக் கழகத் தலைவர் இரா.செந்தில்குமார், புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி வெ.துரை, புதிய பேருந்து நிலையப் பகுதி செயலாளர் சாமி.கலைச்செல்வன், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன், ஒரத்தநாடு நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு நகர கழக செயலாளர் பு.செந்தில்குமார், ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், தஞ்சாவூர் ரூபாவதி பூபதி, பூபதி ந.சக்திவேல், எடமேலையூர் தமிழரசன், பகுத்தறிவாளர் கழக மதுரை மாவட்ட தலைவர் வை.கவுதமன், ஒரத்தநாடு அன்பன், காரக்கோட்டை கே.கே.பி.நெடுமாறன், பின்னையூர் சீலன், கண்ணந்தங்குடி அரங்க.குமரவேல், எஸ்.தங்கவேல், எடமேலையூர் ராமலிங்கம், என்னரசு, கும்பகோணம் மாவட்ட துணைச் செயலாளர் துரை.சரவணன், தஞ்சை ஒன்றிய கழகத் துணைத் தலைவர் நா.வெங்கடேசன், பொன்னாப்பூர் திருநாவுக்கரசு, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் கண்ணை இரா.ராஜதுரை உள்ளிட்ட கழகத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எடமேலையூர் ந.லட்சு மணன் ஜெகதாராணி ஜெயக்குமார், ஜெயபிரபா சுந்தர்ராஜன், ஜெயபாலா, வீ.சுந்தரராஜன், தஞ்சை ராஜா- அனிதா ராணி, ஜெ.ஜெ.கவின் ஜெ.ஜெ.காவியா, சு.கோபிகா, சு.மகேஸ்வரன், தருண், பவிகா, இரா.அபி, இரா.கனிகா, திரு மங்கலகோட்டை கீழையூர் மாசிலாமணி – அற்புதம், மாரியம்மன் கோயில் பக்கிரிசாமி- செல்ல பாப்பா, சூர்யா, கண்ணந்தங்குடி மேலையூர் டாக்டர் சிவசங்கரி, சற்குணன், க.கலையரசன், தமிழக வெற்றி கழக மாவட்டப் பொருளாளர் புவனேஸ்வரி, ஆம்பலாப்பட்டு வீரசக்தி-ஜோதி, தஞ்சை கார்த்திகேயன்-சத்யா, தேஜஸ்வரன்,சாய்ரா, கண்ணந்தங்குடி கீழையூர் ந.மாலதி, இந்திராதேவி-கவுதமன், பூங்குழலி-சதீஷ், க.செ.கபிலன், க. செ.கவுசல்யா, செ.சி.கண்மணி, அ. வெ.கயல், அ.வெ.கருணாநிதி, ச. சுருதி, ச.சுகப்பிரியன், எடமேலையூர் என்.ராஜா-செல்வி, கள்ளப்பட்டி தீபிகா-முகில், எடமேலையூர் எஸ்.என்னரசு, பட்டாணி-நதியா, செ.ராமலிங்கம் – உஷா, புவனேஸ்வரி, வடவூர் ராஜா காலாஞ்சிமேடு காந்தலட்சுமி, காரக்கோட்டை நெடுமாறன்- புனிதா, பின்னையூர் அர்ஜுனன் -பூங்கொடி, கண்ணந்தங்குடி மேலையூர் வெங்கடேசன்- இந்திரா, வாசுகி-சாரு, தஞ்சாவூர் பரிமளா, கிருபாகரன்- பிரியதர்ஷினி, தனபால்-ரேவதி, செங்கமலம், அம்மு,நிர்மலா சேகர், கவிதா மனோகரன், ஞானம் அண்ணாதுரை, பெரியார் நகர் நளினி உத்தராவதி, பேராசிரியர் மேகலா கவுதமன், ஊரச்சி முருகானந்தி அருணகிரி, கண்ணை கிழக்கு இரா.அண்ணாமலை, வேதவல்லி, கலா லட்சுமி செந்தில்குமார், காரக்கோட்டை சுந்தரி சந்திரசேகர், சிவராஜன், சிவரஞ்சனி, சென்னை நீத்து- மஹிந்தர், தியா உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு புகழ்மாலை சூட்டினர்.
நிறைவாக மறைந்த ரூபாவதியின் மகள் ஜெயநளினி, கண்ணீருடன் நன்றி கூறினார். ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் அ.உத்திராபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மறைந்த அம்மையார் ரூபாவதி அவர்க ளுக்கு இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து இரங்கல் செலுத்தப்பட்டது.
