”இயக்கத்திற்கு நான் வந்த கதை!” திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் 18ஆவது நிகழ்ச்சி!

2 Min Read

திருவெறும்பூர், ஜூன் 17- மாதந்தோறும் நடைபெறும் பெரியார் வாசகர் வட்ட நிகழ்ச்சி 14.06.2026 அன்று மாலை 6 மணிக்குத் திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

“இயக்கத்திற்கு நான் வந்த கதை” எனும் தலைப்பில் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற காட்டூர் ம.சங்கிலிமுத்து சிறப்புரை ஆற்றினார். பிறந்த இடம் கல்வி, வேலை வாய்ப்பு சூழல், சிந்தனை மாற்றங்கள், பெரியார் கூட்டங்களுக்குச் சென்றது, ஆசிரியரைச் சந்தித்தது, குடும்பத்தில் கொள்கைகளை நடை முறைப்படுத்தியது எனத் தம் அனுபவங்களை வரி சைப்படுத்திக் கூறினார்.

“எனக்கு ‘விடுதலை’ நாளிதழை அறிமுகம் செய்தது, தன்னுடன் பணி செய்த தோழர் தாமஸ் எனவும், முழுமையாக நான் திராவிடர் கழகத் திற்கு வந்த பின்பு, காட்டூர் பாரதிதாசன் ஒன்பதாம் தெருவின் நடுவில் கட்டவிருந்த கோவில் பணிகளைத் தடுத்து நிறுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

தனது தந்தையார் இறப்பில் சடங்கு, சம்பிரதாயங்களை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என உறவினர்கள் முயற் சித்த வேளையில், அதைச் சாதுர்யமாக தடுத்த நிறுத்திய நடவடிக்கை களையும் பகிர்ந்து கொண்டார்.

திருச்சி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையில் இருப்பது காட்டூர் பகுதி. அங்கு தோழர்கள் பெரு முயற்சி செய்து, தந்தை பெரியாரின் முழுவுருவச் சிலையை வைத்தோம். அதில் என்னாலான பங் களிப்புகளையும் நிறைவாக செய்தேன். அந்தச் சிலை திறப்பு விழாவின் போது ஆசிரியர் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்ததும், உணவருந்தியதும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள். எனது தந்தையாரே நீண்ட காலமாக அதைப் பெருமையுடன் குறிப்பிட்டு வந்தார்.

பணி செய்த காலங் களிலும், ஓய்விற்குப் பிறகும் கூட மாவட்ட நிகழ்ச்சிகள் ஒன்றையும் விடுவதில்லை, மாநாடுகளையும் தவறவிடுவதில்லை”, என இயக்கத்திற்கு வந்த கதைகளை சுவைபட எடுத்துக் கூறினார் பெரியார் பெருந் தொண்டர் ம.சங்கிலிமுத்து.

இறுதியில் அ.சிவா னந்தம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மு.சேகர், ஆ.பாண்டிக்குமார், க.புனிதா, பு.வி.கியூபா, ஆ.அசோக்குமார், கரு.புனிதவதி, அ.தமிழ்க்கவி, அ.அன்புலதா, வி.சி.வில்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *