எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

2 Min Read

ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் (பிஆர்ஓ) காலியாக உள்ள 899 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2, அய்டிஅய் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026

பணி: வரைவாளர் (Draughtsman)

ஊதியம்: மாதம் ரூ.5,200 – 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சிவில் வரைவாளர் டிரேடில் அய்டிஅய் படித்திருக்க வேண்டும் அல்லது சிவில் கட்டடக்கலை டிரேடில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஹிந்தி தட்டச்சர்

ஊதியம்: மாதம் ரூ.5,200 -20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஸ்டோர் கீப்பர் (டெக்னிக்கல்)

ஊதிய விகிதம்: 5,200 – 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஸ்டோர் கீப்பர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-குள் இருக்க வேண்டும்.

பணி: ஆபரேட்டர் (கம்யூனிகேசன்)

ஊதியம்: மாதம் ரூ. 5,200 -20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயர்லெஸ் ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் டிரேடில் அய்டிஅய் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆபரேட்டர் (OEMOG)

ஊதியம்: மாதம் ரூ. ரூ.5,200 – 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: எலக்ட்ரிசியன்  ஊதியம்: மாதம் ரூ.5,200 – 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன மின்பணியாளர் டிரேடில் அய்டிஅய் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் மட்டும் ரூ.50 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணைய வழி முறையில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எல்லைச் சாலைகள் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு புனேயில் வைத்து நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், உடற்தகுதி விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *