கூட்டுறவுக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி ஜூன் 22இல் சென்னையில் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

5 Min Read

சென்னை, ஜூன் 17– கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே தவெக அரசு அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், திட்டமிட்டபடி வரும் ஜூன் 22ஆம் தேதி சென்னையில் கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பாகப் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேர்தல் வாக்குறுதி

தமிழ்நாட்டில்  ஆட்சிப் பொறுப் பேற்பதற்கு முன்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

கடந்த மே 24 அன்று மாநில அரசு வெளியிட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக இருந்தது. இதனை எதிர்த்து மே 26 அன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, தவெக அரசு தற்போது புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்: ரூ.75,000-க்கு கீழ் நிலுவையில் உள்ள கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000க்கு மேல் கடன் உள்ளவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நில அளவீடு புறக்கணிப்பு

இதுவரை கூட்டுறவு கடன் தள்ளு படிகள் அனைத்தும் விவசாயிகளின் நில அளவை அடிப்படையாகக் கொண்டே அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது முதன்முறையாகக் கடன் தொகையை அளவுகோலாக வைத்துள்ளதே முதன்மைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சிறு விவசாயிகள் பாதிப்பு: தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு முழுக் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய விதியின் படி ரூ.75 ஆயிரத்திற்கு மேல் கடன் இருந்தால் அவர்களுக்கு முழுக் கடன் தள்ளுபடி கிடைக்காது.

இதர விவசாயிகள் ஏமாற்றம்

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள ஒரு விவசாயி ரூ.1.75 லட்சம் கடன் பெற்றிருந்தால், தேர்தல் வாக்குறுதிப்படி 50 சதவீதமான ரூ.87,500 தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய அறிவிப்பால் அவருக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். மீதித் தொகையை விவசாயியே செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. “முதலமைச்சரையும், விவசாயிகளையும் ஏமாற்றுவதற் காகவே வங்கி உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் இணைந்து இந்தச் சதியை செய்துள் ளனர். ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியைத்தான் விவசாயிகள் கேட்கிறார்களே தவிர, புதிதாக எதையும் கேட்கவில்லை.என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது

சென்னையில் போராட்டம்

எனவே, தற்போதைய புதிய அரசாணையை மாநில அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி முறை யான கடன் தள்ளுபடியை நடை முறைப்படுத்த வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கைகளை முன்வைத்து, ஏற்கெனவே திட்ட மிட்டபடி வரும் ஜூன் 22ஆம் தேதி சென்னை கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் வலுவான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே தவெக அரசு அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *