கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

1 Min Read

தஞ்சாவூர், ஜுன் 17- தஞ்சாவூர் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக, 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் வழங்கப்பட உள்ளன. இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது அடிப்படையில் `கலை இளமணி’ முதல் `கலை முதுமணி’ வரை விருதுகள் வழங்கப்படவுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கலைஞர்கள், வயது மற்றும் கலைத்திறன் சான்றிதழ்களுடன், ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மய்யம், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் – 613 403 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கெனவே தேசிய, மாநில அல்லது மாவட்ட விருதுகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *