இண்டியா’ கூட்டணியின் ஒற்றுமையை தனது நடவடிக்கைகளால் ராகுல் காந்தி சிதைக்கிறார், திமுக ஏடான முரசொலி குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< 107 நாட்களாக நீடித்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம்: ஜெனீவாவில் 19இல் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
< சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கும் பாஜக அரசு, பட்டியல் இடுகிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கட்சித் தாவல்: நாடாளுமன்றத்தில் மூன் றில் இரண்டு பங்கு பாஜக பெற, அமித்ஷா செய்யும் சூழ்ச்சி, என காங்கிரஸ் கண்டனம்.
தி இந்து:
< தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு தொடங்கிய காலை உணவுத் திட்ட தற்போது தெலங்கானா அரசுப் பள்ளிகளில் தொடக்கம். தெலங்கானா அரசு 2026-2027 கல்வியாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, இன்று அய்தராபாத்தில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது.
தி டெலிகிராப்:
< அயோத்தி ராமன் கோவில் பல கோடி ரூபாய் திருட்டு: வழக்கு போடாமல் விசாரணையா? அயோத்தி ராமன் கோவில் கருவூலத்திலிருந்து ஓராண்டுக்கும் மேலாக பணமும் மதிப்பு மிக்க பொருட்களும் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை காவல்துறையில் வழக்கு (FIR) பதிவு செய்யப்படவில்லை. இதனால், குற்றவாளிகள் எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பு பதிவு செய்து வரி செலுத்த வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம்: அக்கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சட்டப்பூர்வ நிலை, நிதி விவரங்கள், அமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் வரி விதிப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அவர் கோரியுள்ளார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்கிறார் பகவத்.
– குடந்தை கருணா
