பார்ப்பனரல்லாதார் என்கிற பெயர் ஒரு பெரும்பான்மை மக்களை ஒரு சிறுபான்மை மக்கள் “அல்லாதார்” என்கிற பெயரால் அழைப்பதாக இருப்பதாலும் அது அவ்வளவு சரிப்படுமா? மேலும் இந்நாட்டு மக்கள் அல்லாத அந்நியர்களும் பார்ப்பனர் அல்லாதார் என்ற தலைப்பின் கீழ் வரக்கூடுமாதலாலும், தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென் இந்தியாவில் வாழும் எல்லா மக்களுமே வரக்கூடுமாதலாலும், இது தவிர்த்துத் தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும் அந்தத் தலைப்பிலும் தமிழ்ப் பண்பில்லாத தமிழ்க் கலாச்சாரத்திற்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளாமல் இருப்பார்களா? ஆதலால், மக்களை இனத்தின் பேராலேயே, கலாச்சாரத்தின் பெயராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலேயே பார்ப்பனரல்லாதார் கழகத்தை, ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கழகம் என்கிற பெயரால் அழைக்க வேண்டியதானதன்றி வேறென்ன?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
