குடியேற்றம் நகரில் எழுச்சியோடு நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

2 Min Read

குடியேற்றம், ஜூன் 16- 10.6.2026 அன்று மாலை 6:00 மணிக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் குடியேற்றம் நகர தலைவர் சி.சாந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணித் தலைவர் இரா.இராஜகுமாரி வரவேற்புரை ஆற்றினார்.

வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்டக் செயலாளர் இ.தமிழ் தரணி, பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மகளிர் அணி ச.ஈஸ்வரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்

மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் தொடக்க உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் நோக்க உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் குடியேற்றம் நகர மன்ற தலைவர் எஸ் சவுந்தர ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

திமுக நகர அவைத் தலைவர் க.கோ.நெடுஞ்செழியன், திமுக மாவட்டப் பிரதிநிதி கவிஞர் த.பாரி, திமுக மாணவர் அணி பொறுப்பாளர் தூயவன், சி.பி.அய்.எம். தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சிலம்பரசன் ஆகியோர் கலைஞரின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்கு ரைஞர் பா.மணியம்மை சிறப் புரை ஆற்றினார்.

வேலூர் மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் க.சையத் அலீம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வே. விநாயகமூர்த்தி, மாவட்ட  பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால், குடி யேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம், திமுக பொதுக்குழு உறுப்பினர் த.புவியரசி, திமுக நகரத் துணைச் செயலாளர்கள் ந.ஜம்புலிங்கம், ம.மனோஜ், வசந்த ஆறுமுகம், திமுக மாவட்ட பிரதிநிதிகள் பெரியகோடீஸ்வரன், கே.தண்ட பாணி, ஏ.நடராஜ், சி.பி.அய்.எம். மாவட்ட குழு உறுப்பினர் வி.காத்தவராயன், சி.பி.அய்.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் குடியேற்ற நகர அமைப்பாளர் வி மோகன் நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *