அயோத்தி, ஜூன் 15 அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான நன்கொடை மற்றும் காணிக்கை நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த சிறீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், எஸ்பிஅய் (SBI) வங்கியுடன் இணைந்து வழக்கமான தணிக்கை நடந்து வருவதாகவும், இதுவரை எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இருப்பினும், சர்ச்சை தீவிரமடைந் ததை அடுத்து, பிரதமர் அலுவலகம் (PMO) இது குறித்து முழுமையான அறிக்கை அளிக்குமாறு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது.
3 பேர் கொண்ட சிறப்பு குழு
பிரதமர் அலுவலகத்தின் தலை யீட்டைத் தொடர்ந்து, அறக்கட்டளை யின் கோரிக்கையை ஏற்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். இக்குழு வில் இடம்பெற்றுள்ள உயர் அதிகாரிகள்: விஜய் விஸ்வாஸ் பந்த், IAS (லக்னோ பிரிவு ஆணையர்)கிரண் எஸ், IPS (காவல் துறைத் தலைவர் – IG)நீல் ரத்தன் (நிதித் துறையின் சிறப்புச் செயலாளர்)
தற்போது சந்தேகத்தின் பேரில் கோயிலின் சில ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த உயர்மட்ட விசாரணை அயோத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
