பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபத்தைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார் (சேலம், 13.6.2026)

13.6.2026  அன்று சேலம் அம்மாபேட்டை 2 ஆவது மார்க்கெட் தெருவில் உள்ள பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபம் மற்றும் அதில் அமைந்துள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நூலகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி படிப்பகம் ஆகியவற்றைத்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமையேற்று
ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் ஒருங்கிணைத்தார். சேலம் மாவட்ட கழகத் தலைவர் வீரமணி ராஜு, தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார். சேலம் மாவட்ட செயலாளர் மூனாங்கரடு பெ. சரவணன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் மாவட்டத் துணைத் தலைவர் சு. இமயவரம்பன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.கார்த்திக், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் துரை சக்திவேல், அயோத்தியா பட்டினம் ஒன்றிய கழகத் தலைவர் டாக்டர் என்.ராஜேந்திரன், வீரபாண்டி ஒன்றிய கழகத் தலைவர் ஜெ.காளியப்பன், மாநிலப் பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி கருணாநிதி, ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், ஆத்தூர் கழக மாவட்டச்  செயலாளர் நீ.சேகர், ப.க. அமைப்பாளர் மாயக் கண்ணன், ஆத்தூர் மாவட்ட ப.க. தலைவர் வ. முருகானந்தம், பழ. பரமசிவம், போலீஸ் ராஜு,  உத்தர கவுண்டம்பாளையம் செல்வம், கஞ்ச நாயக்கன்பட்டி சிறீதர், அம்மாபேட்டை குமாரதாஸ், ரெசென்செரெ சிஸ்டம் சொலூஷன்ஸ் இயக்குநர் வாசந்தி, ரெசென்செரெ சிஸ்டம் சொலூஷன்ஸ் மேலாளர் மதுரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர்  துரை சக்திவேல் இனிப்பு வழங்கி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *