பொன்னேரியில் 12 சிசிடிவி கருவிகளுடன் பிங்க் மகளிர் புறக்காவல் மய்யம் திறப்பு!

1 Min Read

பொன்னேரி, ஜூன் 13– பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முகப்பில், மாணவியரின் பாதுகாப் பிற்காக, ‘பிங்க்’ மகளிர் உதவி காவல் மய்யம் அமைக்கப்பட்டிருப்பது, மாணவியர், பெற்றோர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1,800க்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு, பள்ளி விடும் மாலை நேரங்களில், மாணவியர் மொத்தமாக வெளியேறி, பொன்னேரி – திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை வழியாக வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

அச்சமயங்களில், ‘பைக் ரோமியோக்கள்’, பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

அதையடுத்து, தற்போது பள்ளி முகப்பில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், ‘பிங்க்’ மகளிர் உதவி காவல் மய்யம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மகளிர் உதவி காவல் மய்யத்தின் அருகில், மாணவியரின் பாதுகாப்பிற்காக, மூன்று இடங்களில், 12 ‘சிசிடிவி’க்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

அவை, காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இந்த மகளிர் காவல் உதவி மய்யம், நேற்று முன்தினம் (11.6.2026) பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பொன்னேரி உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்த விழாவில், பொன்னேரி காவல் ஆய்வாளர் தமிழன்பன் முன்னிலை வகித்தார். காவல் நிலைய அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இந்த மகளிர் காவல் உதவி மய்யத்தில், அரசுப்பணிகளுக்கான தேர்வு எழுதுவோருக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள், அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாணவியர் மற்றும் மகளிர், அவசர உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு, தேவையான உதவி மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *