வாசிங்டன், ஜூன் 13– பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் இது குறித்து கூறுகையில், “கட்டடத்தின் உள் அமைப்புகள் காற்றில் சில மாறுபாடுகளைக் கண்டறிந்தன. இதன் முக்கியத்துவத்தை முழுமையாக அறியும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நெறிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன” என்று தெரிவித்தார். இந்தச் சோதனையின் போது பென்டகன் வளாகத்தின் 2 முதல் 5 வரையிலான தளங்களில், 4 முதல் 7 வரையிலான நடைபாதைகள் முற்றிலும் மூடப்பட்டன.
இந்த அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ சேவை துறையினர் நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கட்டடத்தின் பாதுகாப்புப் பிரிவு ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், கூடுதல் காற்று பரிசோதனைகள் செய்யப் படுவதாகவும், இதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகலாம் என்றும், வெளியில் நடக்கும் அவசரக் கால நடவடிக்கைகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
