சிதம்பரம், ஜூன் 13- சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகில், 09-06-2026 அன்று அன்று – முத்தமிழறிஞர் கலைஞர் 103-ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக துணைச் செயலாளர் என்.முருகன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட கழகச் செயலாளர் கோவி. பெரியார்தாசன் தலைமையேற்றார்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி. சிலம்பரசன், இளை ஞரணி செயலாளர் மா.பஞ்சநாதன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழக சொற்பொழிவாளரும், மாவட்ட கழகத் தலைவருமான பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் உரையாற்றினார். இறுதியாக கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி கலைஞரின் சிறப்புக்களையும், தொண்டுகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக நகர கழக அமைப் பாளர் இரா.செல்வரத்தினம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கீரப் பாளையம் ஒன்றிய தலைவர் அசோக், தி.மு.க. கவுன்சிலர் வெங்க டேசன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டனர்.
